காரைக்குடியில் அமமுகவினர் தேர்தல் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. விழா நிகழ்வின் ஒரு பகுதியாக வந்த தொண்டர்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது. பிரியாணி வழங்கியதை காட்சிப் படுத்த முயன்ற போது தொண்டர்களுக்கும் செய்தியாளர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
அப்போது அமமுகவின் காரைக்குடி மாவட்டச் செயலாளர் செய்தியாளர்களை தாக்க முயன்ற செயலால் அங்கு பதட்டம் காணப்பட்டது. செய்தியாளர்களை நன்முறையில் நடத்துகிறார் என்று சமீப காலமாக பேசப்படும் டிடிவி தினகரனின் அமமுக கட்சியில் மாவட்ட செயலாளர் செயலாளனது அமமுக கட்சிக்கு பெரிய கலங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.