கால மாற்றம் என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகி விட்டது. அதுவும் இன்று கணினி மற்றும் தொழில்நுட்பம் இல்லாத இடங்களே இல்லை என சொல்லும் அளவுக்கு அதன் வளர்ச்சி விண்ணை மட்டும் அளவுக்கு உள்ளது.
ஆனால், அதன் கூடவே மனிதர்களுக்கு ஆபத்துகளும் தொடர்ந்து கொண்டே வருகிறது. இன்டர்நெட் வளர்ச்சியால் இன்றைய நவீன உலகில் அனைத்தும் கைக்குள் அடங்கி விட்டது. அதாவது உணவு முதல் வீட்டு உபயோக பொருட்கள் வரை இன்று ஆன்லைன் இல் ஆர்டர் செய்தால் கிடைத்து விடும் அளவில் உள்ளது.
இதனால் இன்றைய தலைமுறையில் உடல் உழைப்பு சார்ந்த வேலைகள் என்பது எட்டாத கணியாகவே உள்ளது. தற்போது, பிரேசில் ஆராய்ச்சியாளர்கள் இப்படி எதையுமே செய்யலாமல் இருப்பவர்களும், அமர்ந்த இடத்தில் இருந்தே அனைத்து பணிகளையும் செய்பவர்களுக்கு நிச்சயம் முதுகெலும்பு பிரச்சினை உண்டாகும் என கூறி அதிர்ச்சியை கிளப்பி உள்ளனர்.
ஆம், ஒரே இடத்தில் சுமார் 2 மணி நேரங்களுக்கு மேலாக அமர்ந்தால் இது போன்று பிரச்சினைகள் உருவாகலாம் என்றும், முடிந்த அளவுக்கு அவ்வப்போது நடப்பது, சிறு சிறு உடற்பயிற்சிகளை மேற்கொள்வது சிறந்தது என அறிவூறுத்தி உள்ளனர்.