Mnadu News

பிளாக்கிங்யில் சம்பாரிக்க முடியுமா?

எழுதுவது உங்களுக்கு புடிக்கும் அதில் சம்பாரிப்பது என்று தேடிக்கொண்டு இருக்கிறிர்களா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கானது. நீங்கள் பிளாக் என்ற வார்த்தையை கேள்விப்பட்டிருப்பீர்கள். பிளாக் என்றால் வலைத்தளம் என்பதே ஆகும். பிளாகில் தொடர்ச்சியாகவோ அல்லது சீரான இடைவெளியிலோ கட்டுரைகளை வெளியிடும் ஒரு இணையதளம். இந்த பிளாக் (Blog) இல் தனிப்பட்ட தகவல்கள் (Personal Blog), கதைகள் (Story Blog), சுய முன்னேற்றம் (Self Development Blog), தொழில்நுட்பம் (Technology), தினசரி செய்திகள் (Daily News), பயண அனுபவங்கள் (Travel Experience) இது போன்ற பல்வேறு வகைகளில் கட்டுரைகளை வெளியிடலாம். இதற்கு உங்கள் கற்பனையே எல்லை.

அதிகாரப்பூர்வமற்ற முறையில், முதல் வலைப்பதிவு (blog) ஜஸ்டின் ஹால் (Justin Hall) என்பவரால் (link.net) உருவாக்கப்பட்டது. அந்த நேரத்தில் பிளாக் (blog) அல்லது வெப்பிளாக் (weblog) என்ற வார்த்தையை யாருக்கும் தெரியாது. ஜஸ்டினின் வெப் பிராப்பர்டி (web property) வலைப்பதிவு போலவே இருந்தது. அவர் இணையத்தில் கண்ட “பொருள்” பற்றி தவறாமல் பதிவிட்டார். அது ஒரு “தனிப்பட்ட நாட்குறிப்பு”. “Weblog” என்ற சொல் முதன் முதலில் அதிகாரப்பூர்வமாக 1997 இல் ஜோர்ன் பார்கேர் (Jorn Barger) ஆல் அறிவிக்கப்பட்டது. 1999 இல் weblog ஆனது பிளாக் என சுருக்கப்பட்டது. இந்த கட்டத்தில், சில கணினி மற்றும் இணைய வசதி கொண்டவர்கள் வலைப்பதிவை தொடங்கினார். இருப்பினும், இது பிரபலமாக இல்லை.

ஜஸ்டின் ஹால் (Justin Hall)

பின்னர் 2003 இல் வேர்ட்பிரஸ் (Word press) வந்தது. அதன் வரவால் நிறைய மாறியது. வேர்ட்பிரஸ் (Word press) இலவச பிளாக்கிங் தளத்தை வழங்கத்தொடங்கியது. Install செய்வது, பராமரிப்பு மற்றும் பயன்படுத்துவது மிகவும் எளிதானது என்பதால் நிறைய பேர் பயன்படுத்த தொடங்கினர். தற்போது 75 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட வலைப்பதிவுகள் வேர்ட்பிரஸ் பிளாக்கிங் தளத்தைப் பயன்படுத்துகின்றன.

பிளாக்-ஐ ஜெர்னல் என்றும் கூறுவர் அதாவது, அங்குதான் bloggers தங்களுடைய பர்சனல், ப்ரொபஷனல் அனுபவங்கள், மற்றும் சாதனைகளை இந்த Virtual உலகத்திற்கு பகிர்வார்கள். Blog என்பது ஒரு வெப்சைட் என்றும் ஆன்லைன் (Online) டைரி என்றும் சொல்லுவார்கள். அங்கு பிளாக்கர்ஸ் (bloggers) தங்களுடைய தினசரி வாழ்க்கையை அப்டேட் (update) செய்வார்கள். தன்னுடைய பிளாக் அதாவது ஆன்லைன் டைரியில் தினசரி எழுதுவதை பிளாக்கிங் (Blogging) என்று கூறுவார்கள். இணையதளங்களில் வெளியிடும் கட்டுரைகளை வலைப்பதிவுகள் பிளாக் போஸ்ட் (Blog Post) என்றும் அழைக்கலாம். வலைப்பதிவுகளை பப்ளீஸ் (Publish) செய்த பிறகு, இணையத்தை பயன்படுத்தும் யார் வேண்டுமானாலும், அந்த வலைப்பதிவுகளை படிக்க முடியும்.

பொதுவாக ஒரு இணையதளம் அல்லது வலைத்தளத்தில் வலைப்பதிவுகளை வெளியிடும் போது தலைகீழ் கால வரிசையில் காட்டும். அதாவது ஒரு புதிய வலைப்பதிவை எழுதி வெளியிடும்போது, அந்த இணையதளத்தில் முதல் வலைப்பதிவு (Post) ஆக காட்டும். ஏற்கனவே முதல் இடத்தில் இருந்த பழைய Post ஆனது இரண்டாவது இடத்திற்கு சென்று விடும். ஒரு இணையதளத்தில் எண்ணிலடங்காத போஸ்ட் களை எழுதி அதை Publish செய்ய முடியும். அதாவது நீங்கள் சில நூறுகள், ஆயிரங்கள் அல்லது லட்சங்கள் என எவ்வளவு போஸ்ட் களை வேண்டுமானாலும் போட முடியும்.

பிளாக் தொடங்குவதற்கு முதலில் ஒரு டொமைன் பெயரை தேர்ந்து எடுக்க வேண்டும். வைக்கப்படும் பெயர் உங்களது பேராக இருக்கலாம் அல்லது உங்களது பிசினஸ் சம்மதமென பெயராக இருக்கலாம் அல்லது எதையாவது எதிரொலிக்கும் பெயராக கூட இருக்கலாம். நீங்கள் முதலில் நன்றாக யோசித்து உங்களுடைய டொமைன் பெயரை தேர்வுசெய்ய வேண்டும். பின்பு அதை மாற்ற இயலாது. நீங்கள் தேர்வு செய்ய வேண்டிய பெயர் கிடைக்கவில்லை என்றால் பின்பு தேர்வு செய்ய வேண்டும் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மற்ற அனைத்தையும் செட்டப் செய்து கொள்ளவும்.

உங்கள் டொமைன் பெயரை தேர்ந்தெடுத்து முடிவு செய்த பின்பு அதை டொமைன் செக்கரில் (Domain checker) சென்று கிடைக்கின்றதா என பார்க்கவேண்டும். நீங்கள் தேர்ந்தெடுத்த பெயர் கிடைக்கவில்லை என்றால் மாற்று பெயர் யோசித்து வாங்கிக் கொள்ள வேண்டும். அடுத்ததாக பிளாட்பார்ம் தேர்வு செய்யவேண்டும். இதில் எளிமையான கன்டென்ட்களை எழுத்தி பதிவிடலாம். பிளாக்கிங் செய்வதற்கு அதிகமான இலவச வெப்சைட் டிசைன்கள் இருக்கின்றன. அதில் வேர்ட்பிரஸ் (WordPress), ஜூம்லா (Joomla), ட்ரூபால் (Drupal) ஆகிய மூன்றும் பிரபலமான பிளாக்கிங் தளங்கள் ஆகும்.

தற்போது உங்களது பிளாக் சிறந்து விளங்குகிறது மற்றும் அதிகமான பார்வையாளர்களை கொண்டிருந்தால், உங்களது பொழுதுபோக்கை பணமாக மாற்றலாம். இதன்மூலம் அவசியம் பணம் பார்க்க வேண்டும் என்பதில்லை ஆனால் நீங்கள் இதன் மூலம் பணம் சம்பாதிப்பதற்கு வழிகள் தேடுகிறீர்கள் என்றால் உங்களுக்காக சில குறிப்புகள்:

பிளாக்யில் அதிக பார்வையாளர்களை பெறுவதற்கு கீ-வட்ஸ் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. எடுத்துக்காட்டாக புத்தகத்தை பற்றி ஒருவர் இணையத்தில் தேடும் போதும் உங்களது புத்தகம் சம்பந்தப்பட்ட வலைப்பக்கத்தை படிக்கச் அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி அதிக வாசகர்கள் உங்கள் பதிவினை படிக்கும் போதும் உங்களது வலைத்தளத்திற்கு பணம் சம்பத்திற்க்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எப்படி 2ரூ பேப்பருக்குள் அவ்வளவு செய்திகள் உள்ளதோ அதே போல் தான் பிளாக்யும் விளம்பரத்தில் இருந்தே பணம் சம்பாரிக்கும் வாய்ப்பு உள்ளது. அதிக பார்வையாளர்கள் கொண்ட வளைதலப்பக்கங்களுக்கே விளம்பரம் திரையிடப்படும் அதன் மூலமே பணமும் வரும்.

இந்தியாவில் 6.7 மில்லியன் பிளாக்கர்ஸ் இருக்கின்றனர். இதில் 53 சதவிகிதம் பேர் பெண்களே. சராசரியாக 12 மில்லியன் பிலாக்கிங் சமூக வலைதளம் மூலமாகவே பகிரப்படுகிறது. 85 சதவிகிதம் பேர் தங்களது பிசினஸ் மற்றும் ப்ராண்ட்களை வலியுறுத்துவதர்காகவே பிளாக்-ஐ பயன்படுத்துகின்றனர். ஒரு நாளில் சராசரியாக 4 மில்லியன் பிளாக் எழுதப்படுகின்றது. வாசகர்கள் சராசரியாக ஒரு வலைப்பதிவைப் படிக்க 37 வினாடிகள் செலவிடுகிறார்கள். அமெரிக்காவில் ஒரு பதிவரின் சராசரி அடிப்படை ஊதியம் ஆண்டுக்கு $50,403 ஆகும். இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் $10,000 வரை பிளாக்கர்ஸ் சராசரியாக சம்பாதிக்க முடியும்.

 இன்று தொழில்நுட்பமும் கல்வியும் வளர்ந்துவிட்டது. இப்போது யார் வேண்டுமானாலும் மிக எளிமையாக தங்களுக்கான இணையதளத்தை திறந்து கொள்ளமுடியும். ஆனால் அதற்காக கொஞ்சம் காசு செலவு செய்தால் போதுமானது. நிறுவனங்கள், கல்வியாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள், தனிநபர்கள், புகைப்பட கலைஞர்கள் என பலரும் தங்களது தேவைக்கேற்ப இணையதளத்தை திறந்துகொண்டு அதன் மூலமாக தங்களது கருத்துக்களை உலகிற்கு கொண்டு சேர்க்கின்றனர். 

Share this post with your friends