கார்த்தி, ராஷி கண்ணா, மூனிஸ்காந்த், லைலா ஆகியோர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வசூலை ஈட்டி பிளாக் பஸ்டர் படமாக அமைந்தது. இயக்குநர் மித்ரன், நடிகர் கார்த்தி இருவருக்கும் இது தங்களது கேரியரில் முக்கியமான படமாக அமைந்தது.
உலகமெங்கும் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், இப்படம் 100 கோடிக்கும் அதிகமான வசூலை வாரிக் குவித்தது. இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த இயக்குனருக்கு தயாரிப்பு தரப்பு ஒரு காரை பரிசளித்தது.
இப்படம் வெளியாகும் முன்பே ஆஹா ஓடிடி தளம் பெரும் தொகைக்கு இப்படத்தை வாங்கியது. வரும் 18 அன்று ஓடிடி ஸ்ட்ரீமிங் நடைபெறும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.