மித்ரன் இயக்கத்தில் தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று திரை அரங்குகளில் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடி வரும் படம் “சர்தார்”.
கார்த்தி தந்தை மகன் என இரட்டை வேடங்களிலும், ராஷி கண்ணா, லைலா, சரத் ரவி, மூனிஸ்காந்த் ஆகியோர் நடிப்பில் வெளியாகி உள்ளது இப்படம்.
பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்பாடால் வரும் தீமை மற்றும் அதை ஒட்டி சர்வதேச அளவில் நடைபெறும் அரசியல் குறித்து இப்படம் பேசியுள்ளது. தற்போது வரை இப்படம் 40 கோடிகளை வசூல் செய்துள்ளது.
இந்த நிலையில் படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்றது, அதில் பேசிய இயக்குநர் படத்தின் இரண்டாம் பாகம் நிச்சயம் எடுக்கப்படும் அது வேறு ஒரு ஆழமான விஷயத்தை பேசும் என கூறியுள்ளார்.