Mnadu News

பீகாரில் ஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு: பாட்னா உயர்நீதிமன்றம் தடை.

பீகாரில் 500 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தடை விதிக்க கோரி பாட்னா உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யபட்டிருந்தது.இந்த மனுவை விசாரித்த பாட்னா உயர்நீதிமன்றம், 500 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது,1948 ஆம் ஆண்டைய மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டத்திற்கு எதிரானதாகும்.அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக இந்த நிகழ்வுக்கு பணத்தை பயன்படுத்துவது தவறான ஒன்றாகும். எனவே,ஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

Share this post with your friends