Mnadu News

பீட்சா-3 ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு!

2012 ஆம் ஆண்டில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி, ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான ‘பீட்சா’ படம் மாபெரும் வெற்றியை பதிவு செய்து, பலரது வாழ்வில் திருப்புமனையை ஏற்படுத்தியது. மேலும், அதன் இரண்டாம் பாகம் வெளியானது, ஆனால் அது போதிய அளவில் பெரிய அளவு வரவேற்பை பெறவில்லை. தற்போது பீட்சா 3 ஆம் பாகம் “பீட்சா 3 மம்மி” என்ற பெயரில் தயாராகி உள்ளது. இதில் அஸ்வின் காக்குமனு, பவித்ரா மாரிமுத்து, கவுரவ் நாராயணன், காளி வெங்கட், குரேஷி, அனுபமா, அபி போன்ற பலர் நடித்துள்ளனர்.

திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சி.வி.குமார் தயாரித்துள்ள இப்படத்தை மோகன் கோவிந்த் இயக்கி உள்ளார். மேலும், தடம் படத்தின் மூலம் பிரபலமடைந்த அருண்ராஜ் இசை மற்றும் பின்னணி இசை பணிகளை கையாண்டு உள்ளார். பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி “பீட்சா 3 மம்மி” திரைப்படம் வருகிற ஜூலை 28 ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.


Share this post with your friends