கேரளா மாநிலம் காசர்கோட்டில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பாக பெரியா என்ற இடத்தில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இரு தூண்களுக்கு இடையே இணைந்து கான்கிரீட் அமைக்கும் பணி இரவில் நடைபெற்று வந்தது. அதிகாலை 3 மணிக்கு கான்கிரீட் முழுவதும் போட்டு முடித்துவிட்டு தொழிலாளர்கள் கீழே இறங்கி கொண்டிருந்த போது திடீரென இந்த கான்கிரீட் போடப்பட்ட பகுதி சரிந்து முழுவதும் இடிந்து கீழே விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த பாலத்தை மேகா கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம் கட்டி வருகிறது. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பேக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஐபிசி 336, 338 மற்றும் கேபி 118 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் கட்டுமானப்பணி தரம் குறைந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More