Mnadu News

புதிய தலைவர் முடிவுகளை எடுப்பார் : ராகுல் காந்தி நம்பிக்கை.

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில், கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான, ‘ஒற்றுமை யாத்திரை’ என்ற பெயரிலான நடை பயணத்தை காங்., – எம்.பி., ராகுல்காந்தி சமீபத்தில் துவக்கினார். இந்தநிலையில் ஆந்திர மாநிலம் அடோனியில் இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்ட ராகுல்காந்தி செய்தியாளர்களிடம் பேசிய போது, “காங்கிரஸ் தலைவரின் பங்கு குறித்து என்னால் கருத்து கூற முடியாது, அது குறித்து கார்கே கருத்து தெரிவிக்க வேண்டும். எனது பங்கு என்ன என்பதை தலைவர் தான் முடிவு செய்வார். காங்கிரஸ் கட்சியில் தலைவரே உச்சபட்ச அதிகாரம் உள்ளவர். அவரே அனைத்து முடிவுகளையும் எடுப்பார் என்றார். அதோடு, ஆந்திரா – தெலுங்கானா பொறுத்த வரையில், ஆந்திரப் பிரதேச மக்களுக்கு மோடி அரசு சில உறுதிமொழிகளை அளித்துள்ளது. அந்த அடிப்படைக் கடமைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று கூறி உள்ளார்.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More