நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரமின் நடிப்பில் தயாரிக்கப்பட்ட ‘வர்மா ‘ படம் .இது தெலுங்கில் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் வெளிவந்த அர்ஜுன் படத்தின் ரிமேக் ஆகும் .
வர்மா படம் தெலுங்கில் உள்ள அர்ஜுன் ரெட்டியை போல இல்லை என இந்த படத்திலிருந்து இயக்குனர் பாலாவை படக்குழு நீக்கியது . அதோடு மட்டுமல்லாமல் வர்மா படத்தை முதலில் இருந்து எடுக்கப்படும் என படக்குழு சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது .
மேலும் இந்த படத்தின் இயக்குனராக அர்ஜுன் பட இயக்குனர் சந்தீப் வாக வர்மா படத்தை இயக்கவுள்ளார் ,இந்த நிலையில் படத்தின் கதாநாயகியாக முகேஷ் மேத்தாவை மாற்றிய படக்குழு தற்போது பணித்தா சந்துவை கதாநாயகியாக மாற்றியுள்ளது படக்குழு . மேலும் இந்த படத்தில் நடிகை பிரியா ஆனந்தும் நடித்துள்ளதாக படக்குழு தெரிவித்தது .
இந்த நிலையில் ‘ வர்மா’ படத்தை பெயர் மாற்றி ‘ஆதித்ய வர்மா’ என்று ஒரு போஸ்டர் வெளியாகியுள்ளது . இந்த படத்தில் இன்னும் என்னென்ன மாற்றங்கள் செய்துள்ளனர் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் .