Mnadu News

புதிய மோட்டார் வாகன திருத்தச் சட்டம் இன்று முதல் அமல்.

கடந்த 2019-ஆம் ஆண்டில் மத்திய அரசு கொண்டுவந்த புதிய மோட்டார் வாகன திருத்தச் சட்டம் பல மாநிலங்களில் ஏற்கெனவே அமலுக்கு வந்துவிட்ட நிலையில், சுமார் மூன்று ஆண்டுகள் கழித்து கடந்த வாரம் நடைமுறைப்படுத்துவதற்கான அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.
அதன்படி, 46 வகையான விதிமீறல்களுக்கு அபராதம் உயர்த்தப்பட்டுள்ளது.
உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டினால் முன்பு 500-ரூபாய் ஆக இருந்த அபராதத் தொகை இப்போது 5, ஆயிரம் ரூபாய் ஆக பத்து மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கைப்பேசியில் பேசிக் கொண்டே மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டினால் இப்போது ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இதே விதிமீறலை செய்து இரண்டாவது முறை பிடிபட்டால் இனி 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.
கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை 18 வயதுக்கு உள்பட்ட சிறுவர்கள் ஓட்டினால், அவர்களுடைய பெற்றோருக்குத் தண்டனை விதிக்கப்படும். அதோடு;, வாகனங்களுக்கான பதிவு ரத்து செய்யப்படுவதோடு, இந்தக் குற்றத்துக்காக 3 ஆண்டுகள் வரை சிறை மற்றும் 25 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும்.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் இப்போது விதிக்கப்படும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் அப்படியே தொடர்கிறது.
பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், சாலைகளில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடுவதும், “வீலிங்’ எனப்படும் அபாயகரமான சாகசத்தில் ஈடுபட்டால் 500 ரூபாயாக இருந்த அபராதம் 5,ஆயிரம் ரூபாய் ஆகவும், இரண்டாவது முறை பிடிபட்டால் அபராதம் 10ஆயிரம் ரூபாய் ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கார் ஓட்டுநர்கள் சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டினால் ஆயிரம் ரூபாய் அபராதம்.
வாகனங்களுக்கு காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டினால் .2ஆயிரம் ரூபாய் அபராதம்.
பதிவு இல்லாத வாகனங்களை ஓட்டினால் 2 ஆயிரத்து 500 அபராதம்.
ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட அவசர கால வாகனங்களுக்கு வழிவிடாமல் இருந்தால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம்.

சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு உயத்தப்பட்ட அபராதம் இன்று அமலுக்கு வந்துள்ளதால், வாகன ஓட்டிகள் தேவையான ஆவணங்கள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறது எனபதை சரிபார்த்துக் கொண்டு சாலைகளில் வாகங்களில் நிதானமாக மிதமான வேகத்தில் செல்லவும்.

Share this post with your friends