Mnadu News

புதுச்சேரியில் குறைந்த தேர்ச்சி விகிதத்தை ஆய்வு செய்ய குழு: முதல் அமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு.

தமிழ்நாடு, புதுச்சேரியில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 91புள்ளி பூஜ்ஜியம் ஐந்து சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தை விட இந்த ஆண்டு 3புள்ளி எட்டு சதவிகிதம் குறைந்துள்ளது.இதையடுத்து. புதுச்சேரியில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம் குறைந்தது குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்து ஆய்வு செய்யப்படும் எனவும் அடுத்த ஆண்டு 100 சதவீதம் தேர்ச்சியை நோக்கி அரசு சிறந்த கல்வியை கொடுக்க முயற்சி எடுக்கும் என்றும் முதல் அமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.அதோடு, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் கல்வி கற்பிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Share this post with your friends