புதுச்சேரி மாநிலத்தை பாஜகவினர் கலவர பூமியாக்கி வருவதாக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா.சிவா குற்றம்சாட்டியுள்ளார்.
புதுச்சேரி, அமைதியாக இருந்த புதுச்சேரி மாநிலத்தை பாஜகவினர் கலவர பூமியாக்கி வருவதாக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா.சிவா குற்றம்சாட்டியுள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் உள்ள அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காவல் துறை அனுமதி பெற்று மனுதர்ம சாஸ்திரத்தை எதிர்த்து தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் போராட்டம் நடத்திய நிலையில், அந்தப் போராட்டத்தில் பாஜகவினர் புகுந்து தாக்குதல் நடத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று கூறினார். அமைதியாக இருக்கும் புதுச்சேரி கலவர பூமியாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.