Mnadu News

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு 4 சதவிகித அகவிலைப்படி உயர்வு.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுவது வழக்கம்.
அதிகரித்து வரும் பணவீக்கத்துக்கு ஏற்ப மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இந்த அகவிலைப்படி உயர்த்தி வழங்குவது நடைமுறையில் இருந்து வருகிறது.
தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அகவிலைப்படி உயர்வு கடந்த ஜூலை மாதம் 1-ஆம் தேதியைக் கணக்கிட்டு, வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 21 ஆயிரம் அரசு ஊழியர்கள் பயனடைவார்கள்.
புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வால் ஆண்டுக்கு 54 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends