Mnadu News

புதுச்சேரி அரசு ஓய்வூதியதாரர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு.

கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து 4 சதவீத அகவிலைப்படி உயர்வு கடந்த ஜூலை மாதம் 1 ஆம் தேதியில் இருந்து முன் தேதியிட்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் அகவிலைப்படி உயர்த்தப்பட்டதையடுத்து, புதுச்சேரியிலும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு செயல்பாட்டுக்கு வந்தது. அதன்படி, புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அறிவித்து கடந்த 8 ஆம் தேதி புதுச்சேரி அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், புதுச்சேரி அரசு ஓய்வூதியதாரர்களுக்கான குடும்ப ஓய்வூதியத்தில் 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 34 சதவீதமாக உள்ள ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி, தற்போது 4 சதவீதம் உயர்த்தப்பட்டதையடுத்து, 38 சதவீதமானது. இதற்கான உத்தரவை புதுவை அரசின் நிதித் துறை சார்புச் செயலர் அர்ஜுன் ராமகிருஷ்ணன் பிறப்பித்தார்.

Share this post with your friends