புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அமைச்சரவை அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தெரிவித்த அவர், இவ்வாண்டு தீபாவளி நல திட்ட பொருட்கள் நேரடி பணமாக பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த முதல்வர் ரங்கசாமி, தீபாவளி பண்டிகைக்கான இலவச அரிசி 10 கிலோ 2 கிலோ சர்க்கரைக்கான தொகையும் வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் பால் உற்பத்தியை பொருத்தமட்டில் தன்னிறைவு இல்லை அண்டை மாநிலங்களிலிருந்தும் பால் பெருகிறோம் கர்நாடகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டதால் நமக்கு பால் கிடைக்கவில்லை. ஆனால் தற்போது தட்டுப்பாடு நீங்கி உள்ளது.
ஜிஎஸ்டி இழப்பீடு, பென்ஷன் அரியர்ஸ், மற்றும் உள்கட்டமைப்பு மேம்படுத்த தேவையான நிதி ஆகியவை கிடைக்கும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பணிகளை தொடர்ந்து செய்துவருகிறோம்.இதில் புதுச்சேரி விமான நிலைய விரிவிக்கத்திற்கு 400 கோடி ரூபாய் அளவில் பணிகள் நடக்கும் என முதல்வர் தெரிவித்தார்.
மழை காலத்தில் மழை நீர் தேங்கி நிற்காமல் இருக்க அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைககளையும் எடுத்து வருகிறது. அதனால் இந்த ஆண்டு மழை நீர் பெரிய அளவில் தேங்காது எனவும் ரங்கசாமி தெரிவித்தார்.