Mnadu News

புதுவையில் அரங்கேறிய ஆன்லைன் மோசடி! லிங்கை கிளிக் செய்த மாணவருக்கு செக் வைத்த கும்பல்! நடந்தது என்ன? 

புதுவை லாஸ்பேட்டையை சேர்ந்தவர் 23 வயதான சசிதரன் என்ற மாணவர் புதுவை அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். நான்காவது ஆண்டு படித்து வருகிறார். இவரது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ஜூலை 3 ஆம் தேதி ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் பிரபலமான மூன்று உணவகங்களுக்கு “ரேட்டிங்” கொடுத்தால் ₹150 பெறலாம் எனஆசை வார்த்தைகளை அள்ளி விட்ட ஒரு மெசேஜ் வந்து உள்ளது. அதை செய்ததும் ₹150 ஐ பெறுவதற்கு டெலிகிராம் மூலமாக லிங்க் வந்தது. அந்த இணைப்பில் கேட்கப்பட்ட அனைத்து விவரங்களையும் சசிதரன் பதிவிட அவரது அக்கவுண்ட்டில் பணம் சரியாக வந்துள்ளது. மேலும் டாஸ்க் அனுப்பவே அதையும் செய்த அவருக்கு சுமார் ₹1500 வரை பணம் வந்துள்ளது. 

இன்னும் அதிக லாபம் பார்க்க ஆசைப்பட்ட மாணவனுக்கு அந்த கும்பல் ஒரு செக் வைத்துள்ளது. ஆம், 7 லட்சம் செலுத்தினால் ₹13 லட்சம் வரை கிடைக்கும் என கூறியதால், பேரசைப்பட்ட அவர் பல வழிகளில் ₹7 லட்சத்தை கட்டி உள்ளார். ஆனால், ₹13 லட்சம் அக்கவுண்ட்டில் இருப்பதாக காட்டிய நிலையில், அதை மாணவரால் எடுக்க முடியவில்லை. 

என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த அவருக்கு அந்த கும்பலை அணுகிய போது உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறைவாக உள்ளது, மேலும் ₹4 லட்சம் செலுத்தினால் மட்டுமே எடுக்க முடியும் என கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியது அந்த கும்பல். 

பின்னர் தான், வசமாக ஏமாற்றபட்டு விட்டதை அவர் உணர்ந்து,  இது குறித்து சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அந்த மாணவர்.  தொடர்ச்சியாக தினம்தோறும் ஆன்லைன் மோசடிகள் அரங்கேறி வருவதால் சைபர் கிரைம் போலீசார் தெரியாத லிங்கை கிளிக் செய்வதோ, தெரியாத கம்பெனிகளில் முதலீடு, ஆன்லைன் முதலீடு போன்று எதையும் செய்ய வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். 

Share this post with your friends