டெல்லியில் நடந்த உலகளாவிய புத்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி,அங்கு அமைக்கப்ட்டுள்ள புத்தர் கண்காட்சியை பார்வையிட்டார். பின்னர் மாநாட்டை தொடங்கி வைத்து பேசியுள்ள பிரதமர் மோடி, புத்த மத போதனைகளை பின்;பற்றி நவீன உலகப் பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்க முடியும்.அதே நேரம்,புத்தரின் பாதையே எதிர்கால நிலைத்தன்மைக்கான பாதை என்பதை அனைவரும் உணரவேண்டும்.அதே சமயம், புத்தபெருமானின் போதனைகளால் ஈர்க்கப்பட்டுள்ள இந்தியா, எப்போதும் உலகின் சோகத்தை தங்கள் சோகமாக நினைக்கிறது,அதனால், இந்தியா அமைதிப் பணிகளில் ஈடுபட்டுள்ளது.குறிப்பாக,அது, துருக்கி பூகம்பமாக இருந்தாலும் சரி, வேறு எந்த நெருக்கடியாக இருந்தாலும் சரி, மக்களுக்கு உதவுவதற்கும், மனிதாபிமானத்துடன் துணை நிற்பதற்கும் இந்தியா தன்னால் முடிந்ததைச் செய்கிறது என்று பேசியுள்ளார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More