ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “ட்விட்டர் இப்போது ஒரு தான் ஒரு புத்திசாலியின் கரங்களில் இருக்கிறது. இனிமேல் நம் தேசத்தை வெறுக்கும் இடதுசாரி மனநோயாளிகள் கையில் இருக்காது” என்று கூறியுள்ளார். முன்னதாக ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீதான் வாழ்நாள் தடையை நீக்குவது குறித்து சூசகமாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் ட்ரம்ப் தற்போது ட்விட்டர் கைமாறியதை வெகுவாகப் பாராட்டியுள்ளார். மஸ்கின் சூசக குறிப்பும், ட்ரம்பின் புகழாரமும் அமெரிக்காவில் கவனம் பெற்றுள்ளது.

4 நீதிபதிகளை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை: கொலீஜியம் நடவடிக்கை.
தமிழக மாவட்ட நீதிபதிகளான ஆர்.சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரை உயர்நீதிமன்ற...
Read More