சென்னையை நோக்கி அடுத்த வாரம் மேலும் ஒரு புயல் வரும் என்ற வதந்தி பரவி வருகிறது. இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அதை நம்ப வேண்டாம் என்று வெதர்மேன் பிரதீப் ஜான், விளக்கம் அளித்துள்ளார். இந்த நிலையில், வதந்தி குறித்து வெதர்மேன் பிரதீப் ஜான் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அளித்துள்ள விளக்கத்தில், ‘இது அடிப்படை ஆதாரமற்றது. இதுபோன்ற செய்திகளை நம்ப வேண்டாம். டிசம்பர் 10ம் தேதி அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம். அது இந்திய கடற்கரையை விட்டு நகரும். இதற்கும் சென்னைக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது’ என்று தெரிவித்துள்ளார்.
