Mnadu News

புரோமோவுக்கு புரோமோ வெளியிட்ட ஜெயிலர் படக்குழு! இன்று மாலை காத்திருக்கும் சர்ப்ரைஸ் தெரியுமா? 

நெல்சன்: 

சின்னத்திரையில் இருந்து கடுமையான போராட்டத்துக்கு பிறகு வெள்ளித்திரையில் கால் பதித்தவர் நெல்சன். கோலமாவு கோகிலா படம் இவருக்கு நல்ல அறிமுகமாக அமையவே, அதற்கு அடுத்த படியாக சிவகார்த்திகேயன் இவரை அழைத்து வாய்ப்பு கொடுத்தார். அது தான் “டாக்டர்”. இந்த படமும் பிளாக் பஸ்டர் ஹிட். தொடர் ஹிட் படங்களால் தமிழ் சினிமாவின் டிரெண்டிங் இயக்குநர் வரிசையில் இடம் பிடித்தார் நெல்சன். 

விஜய் பட தோல்வியும் ரஜினி பட வாய்ப்பும்: 

ஒருவருக்கு அதிர்ஷ்டம் அடித்தால் இப்படி தான் அடிக்க வேண்டும் என்பார்கள், அப்படி நடிகர் விஜய் இடம் இருந்து தன்னை வைத்து ஒரு படம் இயக்க உடனடியாக உருவான கதை தான் “பீஸ்ட்”. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான “பீஸ்ட்”, வசூலை குவித்தாலும் படு தோல்வியை தழுவியது. ஆனால், “பீஸ்ட்” வெளியாகும் முன்பே, சூப்பர் ஸ்டார் ரஜினி தன்னை வைத்து ஒரு படம் இயக்க சொன்னார் நெல்சனை. அது தான் “ஜெயிலர்”. பல தரப்பில் இருந்தும் நெல்சன் இயக்க வேண்டாம் உங்கள் படத்தை என ரஜினியிடம் கூறவே, இயக்குனரை மாற்றாமல் அவரின் முடிவில் தெளிவாக இருந்து, நெல்சனை அழைத்து நிதானமாக சரியான படத்தை எடுங்கள் நான் உள்ளேன் என கூறினார். இது நெல்சனுக்கும் அவரின் டீமுக்கும் ஒரு டானிக் போல அமைந்தது. 

மீண்டும் அனிருத் : 

பேட்ட, தர்பார் படங்களுக்கு பிறகு மீண்டும் மூன்றாவது முறையாக ரஜினியின் படத்துக்கு இசையமைக்கிறார் ராக் ஸ்டார் அனிருத். ஆம், தலைவருக்கு இவர் கொடுத்த பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடிக்கவே. ராசியான இசையமைப்பாளர் என்கிற முத்திரையை பல நட்சத்திர நடிகர்களிடம் இருந்து அனி பெற்றுள்ளார். மேலும், ஜெயிலர் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நேரத்தில் வழக்கமாக, நெல்சன் – அனிருத் இணைந்து புரோமோ விடியோ ஒன்றை போடுவார்கள், அதன் முன்னோட்ட வீடியோ நேற்று மாலை வெளியானது, மேலும் இன்று மாலை ஒரு ஃபுல் புரோமோ வெளியாகும் என புரோமோவுக்கு புரோமோ வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தி உள்ளனர். 

Link : https://youtube.com/watch?v=_GS28LQWbPY&feature=share9

Share this post with your friends