மத்திய பிரதேசத்தை சேர்ந்த பத்திரிக்கையாளர் பிரசூன் மிஷ்ரா, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்,திருப்பூரில் சில தொழிலாளர்கள் இந்தி மொழி பேசியதற்காக தாக்கப்பட்டதாகவும் நேரடி தகவல்கள் கிடைத்தது.அதனடிப்படையில் செய்தி வெளியிடப்பட்டது.அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறேன். என் மீது மத்திய குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் வழங்க வேண்டும்” என்று மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா பிறப்புத்த உத்தரவில், “ஆவடி காவல் நிலையத்தில் ஒரு வாரமும், திருப்பூர் காவல் நிலையத்தில் ஒரு வாரமும் கையெழுத்திட வேண்டும். அத்துடன்;, புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக தவறாக கட்டுரை வெளியிட்டதாக தைனிக் பாஸ்கர் பத்திரிகையில் செய்தி வெளியிட வேண்டும் அதை 4 வாரத்திற்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என்ற நிபந்தனையுடன் பிரசூன் மிஷ்ராவுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More