Mnadu News

புளோரிடாவை பந்தாடிய இயான் புயல்! பலி எண்ணிக்கை உயர்வு!

அமெரிக்காவின் புயல் வரலாற்றில் அந்நாட்டின் புளோரிடா மாகாணத்தை தாக்கிய மிக வலுவான புயல் “இயான்” ஆகத் தான் இருக்க முடியும். கடந்த புதன்கிழமை கேயோ கோஸ்டா என்ற கடற்கரை பகுதியருகே இயான் சூறாவளி புயல் கரையை கடந்தது. சுமார், 150 மைல்கள் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது.

புளோரிடாவை சூறையாடி சென்ற இயான் சூறாவளி புயல், இரண்டாவது முறையாக தெற்கு கரோலினா கடற்கரையில் நேற்று முன்தினம் கரையை கடந்தது. தீவிர வலுவுடன் தாக்கிய இந்த புயலால் நீரில் மூழ்கிய பகுதிகளில் இன்னும் உயிர் பிழைத்தவர்களை மீட்புப் படையினர் தேடி வருகின்றனர்.

இன்னும் பல்வேறு நகரங்களில் எங்கு பார்த்தாலும் ஒரே வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது. இந்நிலையில், அமெரிக்காவை தாக்கிய இயான் புயலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 55 ககும் மேல் அதிகரித்துள்ளது. இதுவரை புயலில் சிக்கி குறைந்தது 54 பேர் உயிரிழந்ததாக உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் கிடைத்துள்ளன.

வரும் புதன்கிழமை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் புயல் பாதித்த இடங்களைப் பார்வையிட்டு பேரழிவை ஆய்வு செய்ய புளோரிடா செல்ல உள்ளார் என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share this post with your friends