உலகையே திரும்பி பார்க்க வைத்த படம் புஷ்பா தி ரைஸ். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என வெளியிட்ட அனைத்து மொழிகளிலும் வசூல் வேட்டை நடத்தியது புஷ்பா.
இந்த படத்தின் தலைப்பு தொடங்கி ஒவ்வொரு அறிவிப்பு வெளியிடப்படும் போதும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா லீட் கதாபாத்திரத்தில் நடிக்க, சுனில், அஜய் கோஷ், நெகடிவ் ரோல்களில் நடிக்க
ஃபாகாத் பாசில் காவல் அதிகாரி வேடம் என படம் முழுக்க நம்பிக்கை அளிக்கும் வகையில் இருந்தது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் வெளியான பாடல்கள் எல்லாம் மொழிகளிலும் ஹிட் அடிக்க. அதிலும் ஓ சொல்றியா பாடல் பெரிய பரபரப்பையும், புகழையும், ஒரு சேர இந்த படத்திற்கு அள்ளி தந்தது. இவை எல்லாம் தாண்டி படத்தின் வசனங்கள் காட்சி அமைப்பு என பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.
புஷ்பா 2 வுக்கான பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இந்த பாகத்திலும் கவர்ச்சி பாடல் ஒன்று உள்ளது என்றும், அதற்கு ஆட நடிகைகள் தேர்வு நடந்து வரும் நிலையில், சமந்தா, ரசுமிகா பெயர்கள் அடிபட்ட நிலையில் தற்போது தமன்னா பெயர் இந்த பட்டியலில் இணைந்துள்ளது. விரைவில் புஷ்பா 2 ஷூட்டிங் துவங்கப்பட உள்ளது.