Mnadu News

பெங்களூருவில் உச்சத்தை தொட்ட வாகன விபத்துக்களின் எண்ணிக்கை! அதிரடி நடவடிக்கையில் போலீசார்!

“வேகம் உயிரை பறித்து விடும் என்பார்கள்”, ஆம், நாடெங்கும் வாகன விபத்துக்களில் இழந்தோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. அதற்க்கு போக்குவரத்து போலீசாரால் பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. இந்த நிலையில் பெங்களூருவில் சென்ற மற்றும் இந்த வருடத்தில் வாகன விபத்துக்களின் எண்ணிக்கை உயர்வை கண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆம், 2022 ஆம் ஆண்டு 3 ஆயிரத்து 800 க்கும் மேற்பட்ட வாகன விபத்துக்களில் 700 க்கும் பேர் உயிரிழந்திருந்தனர். அதே போல இந்த ஆண்டில் கடந்த 7 மாதங்களை பார்க்கும் போது சுமார் 2300 விபத்துக்கள் பதிவாகி உள்ளன. அதில் 416 பேர் உயிரிழந்திருப்பதும் தெரியவந்துள்ளது. இதன்மூலம் இறப்பு விகிதம் உயர்ந்துள்ளத்தை காண முடிகிறது.

சரியான தலைக்கவசம் அணிந்து வாகன விபத்துக்களில் உயிர் பிழைத்தவர்கள் 30 இல் இருந்து 35 சதவீதம் பேர் என்றும், 65 இல் இருந்து 70 சதவீதம் பேர் சரியான தலைக்கவசம் அணியாமல் உயிர் இழந்தவர்கள் என்றும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

அதே போல, கடந்த ஏழு மாதத்தில் மட்டும் தலைக்கவசம் அணியாமல் சென்றதாக 25 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பெங்களூர் போலீசார் தெரிவித்துள்ளனர். முறையாக சிகனல்களை பின்பற்ற தவறும் வாகன ஓட்டிகள் மீதும், தலைக்கவசம் அணியாமல் செல்வவோர், வேகமாக செல்வவோர் என பலரும் சி சி டி வி காட்சிகளை கொண்டு போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தலைக்கவசம் அணிந்து, விதிமுறைகளை சரியாக பின்பற்றி, மிதமான வேகத்தில் வாகனங்களை ஒட்டினாலே விபத்துக்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். மேலும், விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்க இன்னும் தீவிர நடவடிக்கைகளை பெங்களூர் போலீசார் கையில் எடுக்க உள்ளனர்.

Share this post with your friends