Mnadu News

பெங்களூரு விமான நிலைய 2-ஆவது முனையம்: நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர்.

பெங்களூரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் தேவனஹள்ளி பகுதியில் அமைந்துள்ள கெம்பே கௌடா பன்னாட்டு விமான நிலையம் கடந்த 2008-ஆம் ஆண்டு 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டது. அரசு மற்றும் தனியார் கூட்டு முயற்சியில் நடத்தப்பட்டு வரும் பன்னாட்டு விமான நிலையத்தின் 2-ஆவது முனையம் தற்போது 5 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. 2லட்சத்து 55 ஆயிரத்து 645 சதுர மீட்டர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள 2-ஆவது முனையம், ‘பூங்காவில் ஒரு முனையம்’ என்ற அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
2-ஆவது முனையத்தில் 22 நுழைவுவாயில்கள், 15 பேருந்து வாயில்கள், 95 பயணியத் நுழைவுவாயில்கள், 17 பாதுகாப்பு சோதனை வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. விமான நிலையத்தில் சுங்கவரி சோதனைக்காக 9 சோதனைச் சாவடிகள் நிறுவப்பட்டுள்ளன. நுழைவு வாயில்களின் எதிரில் பயணிகள் அமர்வதற்காக 5ஆயிரத்து 932 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. 2-ஆவது முனையத்தின் முதல்கட்டப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், இம்முனையம் ஆண்டுக்கு 2 கோடியே 50 லட்சம் பயணிகளை கையாளும் திறன் கொண்ட கெம்பே கௌடா பன்னாட்டு விமான நிலையத்தின 2-ஆவது முனையத்தை இன்று பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த விழாவில், ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் .

Share this post with your friends