டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுட்டுள்ள மல்யுத்த வீரர், வீராங்கனைகளை போலீஸ் சீருடையில் வந்த சிலர் தாக்கியதாக குற்றச்சாடடு எழுந்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,”நம் நாட்டு வீரர்களிடம் இதுபோன்ற நடந்து கொள்வது மிகவும் வெட்கக்கேடானது. ‘பெண்களை காப்போம்’ என்று பாஜக கூறுவது பொய்யான கோஷம்! உண்மையில், இந்தியாவின் மகள்களை சித்ரவதை செய்வதற்கு பாஜக ஒருபோதும் வெட்கப்படுவது இல்லை” என்று ராகுல் காந்தி தனது கண்டனக் குரலை பதிவு செய்துள்ளார்.

தமிழகம் – புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட அறிக்கையில்,மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம்...
Read More