Mnadu News

பெண் கல்வி, சுகாதாரத்திற்கு முன்னுரிமை: மத்திய இணை அமைச்சர் தகவல்.

நாமக்கல் மாவட்டத்தில் மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் அன்னப்பூர்ணா தேவி நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், ஆய்வு கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில், மத்திய அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தார். பிறகு, பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடி கிராமப்புறங்களில் வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.அதே சமயம், பெண் குழந்தைகளுக்கு உரிய கல்வி, சுகாதார வசதிகளை மேம்படுத்தி மத்தியரசு வழங்கி வருவதாக கூறினாh. இந்த ஆய்வுக் கூட்டத்தில் நாமக்கல் மக்களவை உறுப்பினர் ஏ.கே.பி சின்ராஜ், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர் இ. ஆர். ஈஸ்வரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Share this post with your friends