Mnadu News

பெரிய துறைமுகங்களில் சரக்குகளைக் கையாளும் அளவு உயர்வு: மத்திய அரசு அறிவிப்பு.

மத்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழி ஆகிய துறைகளின் செயலரான சுதான்ஷ் பந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் பெரிய துறைமுகங்கள் கடந்த 2022-23 நிதியாண்டில் முன்னெப்போதுமில்லாத அளவாக 79 கோடியே 50 லட்சம் டன் சரக்குகளை கையாண்டுள்ளன. இது அதற்கு முந்தைய நிதி ஆண்டோடு ஒப்பிடுகையில் 10 சதவீதம் அதிகம்.அதே நேரம், 2022-23ல் பெரிய துறைமுகங்கள் 55 சதவீத சரக்குகளையும், சிறிய துறைமுகங்கள் 45 சதவீத சரக்குகளையும் கையாண்டுள்ளன. பெரிய துறைமுகங்களின் சரக்கு கையாளும் திறன் ஒரு சதவீதம் உயர்ந்திருப்பது மிக முக்கிய சாதனை. ஏனெனில், பல்வேறு சவால்களுக்கு மத்தியில் அவர்கள் இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

Share this post with your friends