Mnadu News

பேட்டரியால் இயங்க கூடிய “அக்ரிஈஸி” எனும் விவசாய எந்திரம் அறிமுகம்

கோவையில் உள்ள புல் மெஷின்ஸ் நிறுவனம், விவசாயத்தில் புதிய தொழில் நுட்பத்தை புகுத்தும் நோக்கத்துடன் “புல் எலக்ட்ரிக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை துவக்கி உள்ளனர். இந்நிலையில் இந்நிறுவனத்தின் புதிய தயாரிப்பாக பல வகை விவசாயப் பணிகளை செயல்படுத்தும் வகையில் பேட்டரியில் இயங்கும் “அக்ரிஈஸி” இயந்திரத்தை அறிமுகப்படுத்தி உள்ளனர். இதற்கான அறிமுக விழா கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்,தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழக பதிவாளர் தமிழ் வேந்தன்,வேளாண்மை பொறியியல் கல்லூரி டீன் ரவிராஜ்,மற்றும் தலைமை பேராசிரியர் சுரேந்திர குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த “அக்ரிஈஸி” இயந்திரத்தை ஒரு முறை சார்ஜ் செய்வதன் மூலம் 5 மணி நேரம் தொடர்ந்து இயக்கமுடியும் என்று கூறப்படுகிறது.

Share this post with your friends