சென்னை மெரீனா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் கருணாநிதிக்கு அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளுக்கு இடையில் நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் தொலைவில் கடலில் கருணாநிதியின் நினைவாக 81 கோடி ரூபாயில் 134 உயரத்துக்கு பேனா வடிவில் சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.கடலில் பேனா சின்னம் அமைப்பதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், 15 நிபந்தனைகளுடன் மத்திய சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு சமீபத்தில் ஒப்புதல் வழங்கியது. மத்திய அரசின் ஒப்புதலை எதிர்த்து ஏற்கெனவே மீனவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதிமுக தரப்பில் ஜெயக்குமார் கூடுதலாக ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்: கட்டுமான பணிகளுக்கான டெண்டர் அறிவிப்பு வெளியீடு.
பொதுவாக ராக்கெட் ஏவுதளம் அமையும் இடமானது, காற்றின் வேகம் மணிக்கு 30 கிலோ...
Read More