கார்த்தி – லிங்குசாமி கூட்டணி :
2010 ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில், கார்த்தி, தமன்னா நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது பையா. நடிகர் கார்த்தியின் திரை வாழ்வில் ஒரு திருப்புமுனை திரைப்படமாக இதை சொல்லலாம்.

யுவன் – முத்துக்குமார் கூட்டணியின் ரீச்:
பையா திரைப்பட வெற்றியை யுவன் ஷங்கர் ராஜா இசையால் தான் சாத்தியப்படாது என்று சொல்ல வேண்டும். இந்த படத்தில் வந்த எல்லா பாடல்களுமே பட்டி தொட்டி எங்கும் இன்று வரை ஒலித்து வருகிறது. என்ன தான் லிங்குசாமி மெனக்கெட்டு இயக்கி இருந்தாலும். இந்த பாடல்கள் தான் படத்தை ரசிகர்களை திரை அரங்குகளை நோக்கி ஈர்த்தது.

பையா 2 :
இந்த நிலையில், ஆர்யா, ஜானவி கபூரை வைத்து பையா 2 வை லிங்குசாமி இயக்க போவதாக ஒரு தகவல் கசிந்துள்ளது. யுவன் சங்கர் ராஜா தான் இதற்கும் இசை. விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
