Mnadu News

பொங்கலுக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு : அமைச்சர் முத்துசாமி நம்பிக்கை.

பண்டிகைக் காலங்களில் சென்னை கோயம்பேட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளை, வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கும் வகையில் சுமார் 400 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கத்தில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டிருக்கும் இந்த பேருந்து நிலையம், கடந்த 2019ஆம் தேதி பணி துவங்கப்பட்டு, 2022ஆம் ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
கட்டுமானப் பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது பொங்கல் பண்டிகைக்குள் பேருந்து நிலையத்தைத் திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட்டால், பண்டிகையின்போது போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படும் என்பதால், பொங்கல் பண்டிகைக்குள் பேருந்து நிலையத்தைத் திறக்க திட்டமிடப்பட்டிருப்பதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

Share this post with your friends