பண்டிகை காலங்களில் வரும் படங்கள் என்றாலே அது பெரும்பாலும் பெரிய நடிகர்களின் படங்களாகவே இருக்கும். அப்படி, வருகிற படங்கள் எல்லா நடிகர்களுக்கும் கை கொடுப்பது இல்லை. ஆனால், ஒரு சில முன்னணி நடிகர்களுக்கு அந்த பண்டிகை கால படங்கள் தான் பெரும் வெற்றியை தேடி தந்துள்ளன.
விஜய்யின் படங்கள் எல்லாம் ஹிட் ஆவது இல்லை. பல தோல்வி படங்களை அவர் தொடர்ந்து கொடுத்து வந்தாலும் பல படங்கள் அவர் பாதையை மாற்றி அமைத்துள்ளன என்றே சொல்ல வேண்டும்.
கோயமுத்தூர் மாப்பிள்ளை, ஃப்ரெண்ட்ஸ், வசீகரா, போக்கிரி, காவலன், மாஸ்டர் ஆகிய படங்களே சிறந்த உதாரணம். இவை விஜய்யின் கலை பாதையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது.
அப்படி, அடுத்த வருட பொங்கல் ரேஸில் களம் காண உள்ள படம் தான் ” வாரிசு ” வம்சி இயக்கத்தில் தமன் இசையில் விஜய் நடித்து வரும் படம். பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி உள்ள இப்படம் ரிலீசுக்கு முன்பே பல கொடிகளை அள்ளியுள்ளது. பார்ப்போம் வாரிசு விஜய்யின் தொடர் வெற்றி என்ற சென்டிமென்ட் ஐ பூர்த்தி செய்யுமா என்பதை.