பொன்னியின் செல்வன் பாகம் 1 மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் வெளியாகி திரை அரங்குகளில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பலரின் கனவு படமான இதை மணி ரத்தினம் நிறைவேற்றியுள்ளார். ஆனால், இதில் கவிஞர் வைரமுத்து இடம்பெறாதது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. வழக்கமாக ரஹ்மான் இசையில் வைரமுத்து தான் அனைத்து பாடல்களையும் எழுதுவார்.

ஆனால், இந்த படத்தில் சங்க இலக்கிய தமிழ் புலவர் ஒருவர் வேண்டுமென எழுத்தாளர் ஜெயமோகன் இடம் மணிரத்தினம் கேட்க அவர் ரெபர் செய்தவர் தான் கவிஞர் இளங்கோ. இவர் பொன்னியின் செல்வன் படத்தில் எழுதியுள்ள பாடல்கள் பெரும் கவனத்தை மற்றும் அவருக்கு நல்ல பெயரை பெற்றுள்ளது.

இது குறித்து இயக்குனர் மணி இடம் கேட்ட போது அவர் மழுப்பலான பதிலையே பேட்டிகளில் தந்து வருகிறார். ஆனால், இணைய வாசிகள் பார்வையில் வைரமுத்து மீ டூ பிரச்சனையில் சிக்கியதலேயே அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது என கூறுகின்றனர்.
