“பொன்னியின் செல்வன்” முதல் பாகம் வரும் 30 அன்று உலகமெங்கும் வெளியாக உள்ள நிலையில், அதற்கான புரொமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே, இப்படத்தில் இருந்து வெளியான முதல் பாடல் முதல் அனைத்து பாடல்கள், டிரெய்லர் வரை அனைவரையும் கவர்ந்து இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை பன்மடங்கு உயர்த்தியது.
எங்கெங்கும் இப்படத்தின் பாடல்கள் ஒலித்து வரும் நிலையில், இப்படத்தின் புரொமோஷன் பணிகள் உலகமெங்கும் நடைபெற்று வருகிறது. அதற்கு பொன்னியின் செல்வன் குழு சென்று வருகிறது. அப்படி, சமீபத்தில் நடந்த நிகழ்வில் படத்தின் இசை அமைப்பாளர் ரஹ்மான் இப்படத்தை பார்த்த பின்பு வேறு மொழி படங்களை பார்பதை விட்டு விட்டேன் என்று கூறி அனைவரையும் நெகிழ வைத்துள்ளார்.