பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று உலகமெங்கும் சென்ற மாத இறுதியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று தற்போது வரை வெற்றிகரமாக திரை அரங்குகளில் ஓடி கொண்டிருக்கிறது. சுமார் 500 கோடிகளை இப்படம் நெருங்க உள்ளது. என்ன தான் தீபாவளிக்கு இரண்டு திரை படங்கள் வந்தாலும் இப்படத்துக்கு மாஸ் குறையவில்லை.
அதே போல் இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் பல தரப்பட்ட ரசிகர்களை படத்துக்கும் மேலாக கவர்ந்து உள்ளது என்றே சொல்ல வேண்டும். பல லட்சம் பார்வைகளை ஒவ்வொரு வீடியோ பாடலும் வெளியாகி கடந்து வரும் நிலையில், டிப்ஸ் தமிழ் இசை நிறுவனம் “ராட்சச மாமனே” என்ற அடுத்த பாடலை வெளியிட்டு உள்ளது.
பாடல் லிங்க் : https://youtu.be/IjvQeKQRfIk