காமெடியன் யோகி பாபு:
சிறு சிறு ரோல்களில் துவங்கிய யோகி பாபுவின் பயணம் பின்னர் முழு நேர பிஸி காமெடி நடிகராக உருவானது. தற்போது இன்னும் பிஸியாக பயணித்து வருகிறார். முன்னெல்லாம் கிடைத்த எல்லாவற்றையும் செய்து வந்த இவருக்கு ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் குவிய துவங்கிய நிலையில், மிகவும் முக்கியமான மற்றும் அனைவரும் விரும்பும் நடிகராக உருவானார்.

கதாநாயகன் யோகி பாபு:
கோலமாவு கோகிலா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அதுவரை காமெடி நடிகராக இருந்தவர் ஹீரோவாக அறிமுகம் ஆனார். அதன் பின்னர், தரமான கதைகளை மட்டுமே தேர்வு நடித்து வருகிறார்.

பொம்மை நாயகி :
ஒரு டீ கடை வைத்து அமைதியான வாழ்வை நடத்தி வருகிறார் யோகி பாபு மற்றும் அவரது குடும்பம். அப்போது, அவரது மகளை சிலர் பாலியல் வன்புணர்வு செய்கின்றனர். அந்த கயவர்களை பிடித்து தந்தையான யோகி பாபு தண்டனை பெற்று தந்தாரா? என்பதே படத்தின் கதை.

பெண் குழந்தைகளை எப்படி பாதுகாத்து வளர்க்க வேண்டும் என்பதை பதிவு செய்யும் முயற்சியில் இப்படம் உருவாகி பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஷான் இயக்கத்தில், நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சுந்தரமூர்த்தி இசையில் பாடல்கள், காட்சிகள், வசனங்கள் ஒவ்வொன்றும் அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

எனவே, பொம்மை நாயகி சமூகத்துக்கு பாடம் கற்பிக்கும் ரியல் நாயகி.