பொள்ளாச்சியில் சமூக வலைதளங்கள் மூலமாக பெண்களை ஏமாற்றிய வழக்கில் திருநாவுக்கரசர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கை விசாரிக்க சிபிசிஐடியை தமிழக அரசு நியமித்தது.
இந்நிலையில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட திருநாவுக்கரசரை சிபிசிஐடி விசாரணை நடத்தியது. மேலும் இந்த வழக்கில் பார் நாகராஜனுக்கு தொடர்புள்ளதாக திருநாவுக்கரசர் கூறியதாக தகவல் வெளியானது. மேலும் திருநாவுக்கரசர் முகப்புத்தக நண்பர்கள் யார் யார் எனக் கண்டறிந்து அவர்களில் தேவைப்படுவோரிடம் விசாரணை செய்ய சிபிசிஐடி முடிவு செய்துள்ளது.
மேலும் தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு விசாரணைக்கு வரும்படி சம்மனை சிபிசிஐடி அனுப்பியுள்ளது. இந்த நிகழ்வு பொள்ளாச்சி வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.