Mnadu News

போகன் பட இயக்குனருடன் 25 ஆவது படத்தில் இணைந்தார் நடிகர் ஜெயம்ரவி

தமிழ்த்திரையுலகில் இருக்கும் பல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் ஜெயம்ரவி .வித்தியாசமான கதைகளில் நடித்து தனது நடிப்பின் மூலம் பல ரசிகர்களை வைத்திருக்கிறார் .இதுவரை 24 படங்களை நடித்திருந்த இவர் தற்போது இவரது 25 படத்தில் நடித்து வருகிறார்.

ஒவ்வரு நடிகருக்கும் அவரின் 25 ஆவது படம் ரொம்பவே முக்கியமான படமாக இருக்கவேண்டும் என்று நினைப்பர் . அதே போல் நடிகர் ஜெயம்ரவியும் அவரது 25 ஆவது படத்தில் ஒரு வெற்றி இயக்குனருடன் இணைந்துள்ளார் .

ஜெயம்ரவி நடிப்பில் வெளிவந்த ரோமியோ ஜூலியட் போகன் போன்ற படங்களை இயக்கிய லக்ஷ்மன் தற்போது ஜெயம்ரவியின் 25 ஆவது படத்தையும் இயக்கவுள்ளார் .இந்த படத்திற்கு டி இமான் இசையமைக்க ஹோம் மூவி மேக்கர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது . இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் .

Share this post with your friends