பழநி மலைக்கோயில், மூலவர் நவபாஷாண சிலையை போகர் சித்தர் உருவாக்கினார். போகர் சித்தரின் ஜீவசமாதி சன்னதி, மலைக்கோவிலில் உள்ளது.இந்த ஆண்டு நீதிமன்ற உத்தரவின்படி, போகர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு உச்சிகால பூஜை நேரத்தில் போகர் சித்தர் வழிபட்ட, புவனேஸ்வரி அம்மன், மரகதலிங்கத்திற்கு பழங்கள் கங்கைநீர், பன்னீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன் பின் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன. புலிப்பாணி ஆசிரமத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் புலிப்பாணி பாத்திர சுவாமிகள், ஜம்பு சுவாமிகள், ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், ஹிந்து தமிழர் கட்சி நிறுவனத் தலைவர் ராம ரவிக்குமார் ஜப்பான் நாட்டில் இருந்து வந்த பக்தர்கள் வெளி மாநில, மாவட்ட, உள்ளூர் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மல்யுத்த வீராங்கனைகளின் இந்த நிலைக்கு மோடி அரசுதான் காரணம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூசன் சரண் சிங்கிற்கு எதிராக, பாலியல்...
Read More