போதைப்பொருள் எதிர்ப்பு பணிக்குழுவின் முதல் தேசிய மாநாட்டை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்ததார். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் போதைப்பொருள் எதிர்ப்பு பணிக்குழுவின் தலைவர்கள் கலந்து கொண்ட மாநாட்டில் பேசியுள்ள அவர்,போதைப்பொருளை ஒழிப்பதில் மோடி அரசு உறுதியாக உள்ளது.வரும் 2047 ஆம் ஆண்டுக்குள் போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம். இந்த பயணத்தில்,அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு,அனைத்து மாநில அரசுகளும், அமைப்புகளும்; ஒன்றிணைந்து போதைப்பொருளுக்கு எதிராக போராட வேண்டும்.அதே சமயம், போதைப்பொருள் கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் போது அனைத்து அணுகுமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும். தற்போது,போதைப்பொருளுக்கு எதிரான போரில் நாம் வெற்றிபெறக்கூடிய தருணத்தில் இருக்கிறோம் என்பதை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். இதில் துரதிருஷ்டமாக போதைப்பொருளை உட்கொள்பவர்கள் பலியாகிறார்கள், அவற்றை விற்பவர்கள் குற்றவாளிகளாகிறார்கள்.இந்த குற்றவாளிகள்; மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More