Mnadu News

போதையில் அரங்கேறிய விபரீதம்! கொல்கத்தாவில் பரபரப்பு! நடந்தது என்ன ?

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஹரிதேவ்பூர் காவல் நிலையத்தில் 2019 ஆம் ஆண்டு 65 வயது பெண் ஒருவர் தனது சொந்த மகனுக்கு எதிராக வன்கொடுமை புகார் அளித்தார். ஆம், இதை கேவிப்பட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அதாவது போதைக்கு அடிமையான மகனை அதில் இருந்து மீட்க போராடியுள்ளார். சுமார் 5 இக்கும் மேற்பட்ட முறை மறுவாழ்வு மையத்தில் மகனை சேர்த்தும் பலன் இல்லை என கூறப்படுகிறது.

அந்தப் புகாரில் போலீசார் நெஞ்சை பதைபதைக்க வைத்தது: மூத்த மகனின் திருமணத்திற்குப் பிறகு, எனது 33 வயது இளைய மகனுடன் எனது வீட்டில் வசித்து வந்தேன். ஏப்ரல் 14 ஆம் தேதி எனது இளைய மகன் என்னைத் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்தார். இருப்பினும், சமூக இழிவு பற்றிய பயம் என்னைப் பற்றிக் கொண்டது. இதுகுறித்து நான் யாரிடமும் தெரிவிக்கவில்லை.

ஆனால், எதுவும் நடக்காதது போல அமைதியாக இருப்பதை மனது கேட்கவில்லை என்றும்,  அதே ஆண்டு மே 5 ஆம் தேதி, எனது இளைய மகன் மீண்டும் மிகவும் வன்முறையாக நடந்து கொண்டு என்னை பாலியல் வன்கொடுமை செய்தார். இதை தொடர்ந்து காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளேன் என கூறி இருந்தார்.

இதையடுத்து அவரது மகனை போலீசார் கைது செய்தனர். நீதிமன்றம் தண்டனையை அறிவிக்கும் முன் குற்றவாளி ஏழரை மாதங்கள் சிறையில் இருந்தார். பாதிக்கப்பட்ட தாயின் மருத்துவ மதிப்பீடு, அவரது சாட்சியம் மற்றும் ஏழு கூடுதல் சாட்சிகள் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில், நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.50,000 அபராதம் விதித்தது.

தாயின் மூத்த மகனும் சாட்சியமளித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், அவரது வீட்டிற்கு கீழே வாடகைக்கு இருக்கும் இரண்டு நபர்களும் சாட்சியம் அளித்தனர் என்பது குறிப்பிடதக்கது. இந்த சம்பவம் கொல்கத்தாவில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Share this post with your friends