விமானப் போக்குவரத்து நிறுவனமான போயிங் இந்த ஆண்டு 2 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பிறகு பல்வேறு நிறுவனங்கள், செலவினங்களைக் குறைக்கும் பொருட்டு ஆள்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இது சர்வதேச அளவில் பணியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அந்தவகையில், அமெரிக்காவின் பிரபல விமானப் போக்குவரத்து நிறுவனமான போயிங் இந்த ஆண்டு 2 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. போயிங் நிறுவனத்தில் நிதி மற்றும் மனித வளங்கள் பிரிவில் பணியாற்றும் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.அதேநேரத்தில் பொறியியல் மற்றும் தயாரிப்பு துறையில் கூடுதலாக ஊழியர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் உற்பத்திப் பிரிவில் 15,000 பேரை வேலைக்கு அமர்த்தியதாகவும் இந்த ஆண்டு மேலும் 10 ஆயிரம் பேர் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் கூறியுள்ளது.

முடங்கிப்போன நாடாளுமன்றம்: ஏப்ரல் 3-ஆம் தேதி வரை இரு அவைககளும் ஒத்திவைப்பு.
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரின் இரண்டாவது பாதி...
Read More