புதுச்சேரியில் மின்துறையை தனியார்மயமாக்கும் முடிவை கண்டித்து மின்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதனைத்தொடர்ந்து துணை ராணுவம் மற்றும் போலீசார் நேற்று இரவு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து சமுதாயக்கூடத்தில் அடைத்தனர். பின்பு இன்று காலை அவர்களை மாவட்ட ஆட்சியர் முன்பு ஆஜர் படுத்தி ஆட்சியர் அறிவுரைகளின் படி விடுதலை செய்யப்பட்டனர்.