Mnadu News

போலீஸ் ஸ்டேஷனாகும் ஹிட்லர் பிறந்த வீடு: உரிமையாளருக்கு 8 லட்சம் யூரோக்கள் அளித்த ஆஸ்திரியா.

ஜெர்மன் சர்வாதிகாரியான அடால்ப் ஹிட்லர்,கடந்த 1889ஆம் ஆண்டு ஆஸ்திரியாவில் ஜெர்மனி எல்லை அருகே உள்ள வீட்டில் பிறந்தார். ஹிட்லர் பிறந்து சில மாதங்கள் மட்டுமே அங்கு வாழ்ந்தார். இருந்த போதும், நாஜிகளின் ஆட்சியின் போது, புனித இடமாக வணங்கப்பட்டது. ஏராளாமான வலதுசாரி ஆதரவாளர்கள் சுற்றுலாவுக்கு குவிந்தனர்.இதனிடையே,கடந்த 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த வீடு, நீண்ட கால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு 2016 ஆம் ஆண்டு கடைசி உரிமையாளருக்கு இழப்பீடாக 8 லட்சம் யூரோக்களை அரசு அளித்து. வீட்டின் முழு உரிமையையும் பெற்றது, இதையடுத்து,இந்த வீடு வரும் 2026 ஆம் ஆண்டு, காவல் நிலையத்துடன் கூடிய பயிற்சி மையமாக திறக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends