கோவை மாவட்டம் வடவள்ளி அருகே உள்ள நவாவூர் கணுவாய் ரோட்டை சேர்ந்த தம்பதியினர சஞ்சீவ் சங்கர்- நந்தினி. இவர்களது 22 வயதான ரவி கிருஷ்ணா தனது கல்லூரி நண்பர்களோடு காரில் பேரூர் அருகே உள்ள ரிசார்ட்டுக்கு சென்று ஓணம் பண்டிகை கொண்டாடிவிட்டு பின்னர் வீடு திரும்ப முயன்றனர். அப்போது தென்னமநல்லூர் அருகே கார் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து கிணற்றுக்குள் பாய்ந்தது. இதில் ரவி கிருஷ்ணன் உட்பட காரில் பயணம் செய்த 3 பேர் உயிரிழந்தனர். தனது ஒரே மகனான ரவி கிருஷ்ணா இறந்த துக்கம் தாளாமல் சஞ்சீவ் சங்கர்- நந்தினி ஆகியோர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர். இதில் நந்தினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் சஞ்சீவ் சங்கருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஒடிசா ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே...
Read More