Mnadu News

மகப்பேறு அறுவைச்சிகிச்சை: வயிற்றுக்குள் மறந்துவிடப்பட்ட துண்டு.

மருத்துவ கவனக்குறைவு என்பது உயிர்பலி வரை செல்லும் என்பதால் மிகவும் அபாயத்துக்குரியது. தமிழகத்தில் கால்பந்து வீராங்கனை பிரியாவுக்கு அறுவைசிகிச்சையின்போது போடப்பட்ட இறுக்கமான பேண்டேஜ் அகற்றப்படாததால், அவர் உயிரே பறிபோனது. இந்நிலையில்,
கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த 2018ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்து பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார் ஏலஹென்கா பகுதியைச் சேர்ந்த பெண். ஆனால் அதன்பிறகு அவருக்கு தீரான வயிற்றுவலி ஏற்பட்டது. அறுவைசிகிச்சை செய்தால் வலி ஏற்படுவது வழக்கம்தான் என மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.

பிறகு பலக்கட்ட மருத்துவமனைப் பயணத்துக்குப் பிறகுதான் அவருக்கு ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது. அப்போது அவரது அடிவயிற்றுப் பகுதி ஸ்கேனில் தெரிய வரவில்லை. இதனால் சந்தேகம் ஏற்பட்டது. அதற்கும் அந்த தனியார் மருத்துவமனை இரண்டு அறுவைசிகிச்சைகளை செய்திருக்கிறது. ஆனாலும் பிரச்னை சரியாகவில்லை.
பிறகு ஆயுர்வேத மருத்துவரிடம் சென்றபோது எம்ஆர்ஐ ஸ்கேன் செய்ததில், அறுவைசிகிச்சைக்குப் பயன்படுத்தும் துண்டு அந்த பெண்ணின் வயிற்றுக்குள் வைத்துத் தைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கஸ்தூரிபாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மூன்றாவது அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த துண்டு உடலுக்குள் இருந்துகொண்டு பல்வேறு பிரச்னைகளையும் ஏற்படுத்தியது. அதன்பிறகும் சில உடல்நலப் பிரச்னைகளுக்காக அவருக்கு நான்காவது முறை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட, பெண் சந்தித்த அனைத்துத் துயரங்களுக்கும், மகப்பேற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் குழுவின் கவனக்குறைவே காரணம் என்றும், மருத்துவமனை தரப்பில் பெண்ணுக்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டது.

Share this post with your friends