மகாத்மா காந்தியின் இரண்டாவது மகன் மணிலால். இவருக்கும் சுசிலா என்பவருக்கும் 1934ஆம் ஆண்டு ஏப்.,14 ஆம் தேதி தென்னாப்ரிக்காவின் டர்பன் நகரில் பிறந்தவர் அருண் காந்தி. தனது வாழ்நாளில், பாட்டனார் மகாத்மா காந்தியின் வழி நின்று, அவரது பாதையில் அரசியல் மற்றும் சமூகப் போராளியாக அடையாளம் காணப்பட்டார். தற்போது மஹாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல்நலம் குன்றியிருந்த அருண் காந்தி, வயது மூப்பின் காரணமாக இயற்கையெய்தினார்.அவரது இறுதிச் சடங்குகள் கோலாப்பூரில் நடைபெற்றது என்று அருண் காந்தியின் மகன் துஷார் காந்தி தெரிவித்துள்ளார்.

மல்யுத்த வீராங்கனைகளின் இந்த நிலைக்கு மோடி அரசுதான் காரணம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூசன் சரண் சிங்கிற்கு எதிராக, பாலியல்...
Read More