மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்து மும்பை நோக்கி பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த பேருந்தில் சுமார் 40 பயணிகள் பயணம் செய்துள்ளார்.இந்த பேருந்து மும்பை-புனே நெடுஞ்சாலையில் லோனவாலா பகுதி அருகே சென்று கொண்டிருந்த போது, அதிகாலை 4.30 மணி அளவில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியுள்ளது. இறுதியில் அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில்; 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 25-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்தவர்களை போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.விபத்து சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓட்டுநர் தூங்கியதால் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More